வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம் தொடர்பில் வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Oct 05, 2024 11:22 AM GMT

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை 22 தேர்தல் மாவட்டங்களுக்குமான வேட்பு மனுக்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட தினம்

இதேவேளை, எதிர்வரும் 27ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். 

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம் தொடர்பில் வெளியான தகவல் | Special Day For Distribution Of Voter Card

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW