வெசாக் தினத்தையிட்டு கைதிகளை பார்வையிட விசேட ஏற்பாடு!

Sri Lanka
By Nafeel May 04, 2023 04:03 PM GMT
Nafeel

Nafeel

வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய, நாளை (5) மற்றும் நாளை மறுதினம் (6) இவ்வாறு சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கைதிகளின் உறவினர்கள் அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புகளை பொதிகளை கைதிகளுக்கு வழங்க முடியும். சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.