தென்கிழக்கு பல்கலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது நேற்று(29) புவியல்த்துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் தலைமையில் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது, புவியியல் தரவுகள் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான அடிப்படை கருத்துகள், கருவிகள் மற்றும் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தும் குறுகிய காலகற்கைநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலைப்பீட முயற்சி
இந்நிலையில், பிராந்தியத்தின் கல்வி மேம்பாட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல்வேறு குறுங்கால கற்கை நெறிகளை முன்னெடுத்துவருகின்ற சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தின் மூத்த பீடங்களில் ஒன்றான கலை கலாச்சார பீடமும் பல்வேறு குறுங்கால கற்கைநெறிகளையும் முன்னெடுத்து வருகின்றன.
அதன் அடிப்படையில் புவியல்துறை ஆரம்பித்துள்ள Short course in Geo-Informatics கற்கைகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் இந்நிகழ்வுக்கு பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீதின் ஆலோசனையின் கீழ் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார்.
மேலும், குறித்த நிகழ்வின்போது Short course in Geo-Informatics இன் இணைப்பாளர் விரிவுரையாள ஏ.எல். ஐயூப், சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலில், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச். முகம்மட் றினோஸ் உள்ளிட்ட பல வளவாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






