போலி நாணயத்தாள் கடத்தல் தொடர்பில் இருவர் கைது
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் பயணித்த இருவர் நேற்றைய தினம் (04.05.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக யாழ்.ஆணையிறவு பகுதியில் மறித்து சோதனையிட்ட போதே குறித்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்களிடமிருந்து 5000 ரூபா மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்களும் மீட்கப்பட்டடுள்ளன.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருவதுடன் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் சந்தேகநபர் இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.