இலங்கையில் இடம்பெறும் பாரிய மோசடி குறித்து அவசர எச்சரிக்கை
இலங்கையில் இடம்பெற்று வரும் பாரிய மோசடி குறித்து தபால் திணைக்களம் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொலைபேசி குறுஞ்செய்திகள் வழியாக இந்த மோசடி இடம்பெறுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவரின் பெயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொதிகளை பெற்றுக்கொள்வதற்கு வங்கி அட்டைகள் ஊடாக கொடுப்பனவு செய்யுமாறு குறுஞ்செய்தி வழியாக கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வங்கித் தகவல்களை பெற்றுக் கொண்டு நிதி மோசடிகள் இடம்பெறுவதாக தபால் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
வங்கி அட்டை விபரங்கள்
இலங்கை தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி இந்த மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதிகளை விநியோகம் செய்வதற்கு வங்கி அட்டை விபரங்களை தபால் திணைக்களம் எப்போதும் கோரியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வங்கி அட்டை விபரங்களை மூன்றாம் தரப்பினர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.
மேலும் மோசடியாளர்களின் போலி குறுஞ்செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம் எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.