சர்ச்சைக்குரிய நடுவரின் தீர்ப்பு - முடிவு தொடர்பில் இலங்கை அணி முறைப்பாடு
இந்தப் போட்டியின் நான்காவது ஓவரில், முதல் பந்திலேயே தலைமை நடுவரால் ஆட்டமிழந்ததாக அறிவித்த தீர்ப்பினை மூன்றாவது நடுவர் ஆட்டமிழக்கவில்லை என தெரிவித்தமை குறித்து முறைப்பாடு அளிக்க இலங்கை அணி தீர்மானித்துள்ளது.
போட்டி நடுவர் ஊடாக இது தொடர்பான முறைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக இலங்கை அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் நவீத் நவாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று (06.03.2024) நடைபெற்ற இருபதுக்கு 20 போட்டியின் நான்காவது ஓவரில் பினுர வீசிய பந்தில் சௌம்யா சர்க்கார் விக்கெட் காப்பாளாரான குசல் மெண்டிஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பயிற்றுவிப்பாளர்
அதனைத் தொடர்ந்து, சௌம்யா சர்கார் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்த போது, அவர் ஆட்டமிழக்கவில்லை என மூன்றாம் நடுவரால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
எனினும், குறித்த மறுபரிசீலனையின் (ultra edge) போது, பந்து துடுப்பில் பட்டுள்ளதாக சிறிய அதிர்வலை ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மூன்றாம் நடுவரால் அவர் ஆட்டமிழகவில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையானது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.