சம்மாந்துறை வீரமுனை வரவேற்பு கோபுரம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ஸ்ரீலங்கா உலமா கட்சி
சம்மாந்துறை வீரமுனை வரவேற்பு கோபுரம் சம்பந்தமாக முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கெதிராக பிள்ளையான் களத்துக்கு வர முடியும் என்றால் முஸ்லிம் எம்.பிக்களைக் கொண்ட கட்சித்தலைவர்கள் பூனைகள் போல் சுருண்டுகொண்டுள்ளனரா என ஸ்ரீ லங்கா உலமா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீலங்கா உலமா கட்சி தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கலவர காலங்கள்
மேலும் தெரிவிக்கையில், “சம்மாந்துறை சம்பவங்கள் எலி கொழுத்து பூனையை பார்த்து அழைக்கும் நிலையை காட்டுகிறது. இவற்றுக்கு காரணம் சம்மாந்துறை எமது பேச்சை கேட்டு சொந்தக்காலில் நிற்காமல் விட்டமைதான்.
ஒரு காலத்தில் வீரம் என்றால் அதற்கு மறுபெயர் சம்மாந்துறை என்றிருந்தது.
கலவர காலங்களின் போது சம்மாந்துறை இளைஞர்களின் வீரம், தியாகம் வரலாற்று பதிவானது. துப்பாக்கியை தூக்கிய பயங்கரவாதிகள் முன்பாக நெஞ்சு நிமிர்த்தி நின்ற ஊர் சம்மாந்துறை ஆகும்.
தற்போது முஸ்லிம் காங்கிரசுக்கும், மக்கள் காங்கிரசுக்கும் தேசிய காங்கிரசுக்கும் அடிமைப்பட்டுப்போய் குத்துச்சண்டை வீரர் முஹம்மட் அலியின் கடைசி கால வாழ்க்கை போல் சம்மாந்துறை தள்ளாடுகிறது. இதற்கு என்ன காரணம்?
மேலும், மக்கள் ஹக்கீமையும் ரிஷாத்தையும் நம்பிக்கொண்டிருந்ததால் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கருடனை பார்த்து சௌக்கியமா என கேட்பது போல் ரணில் அரசில் இருந்து கொண்டு பிள்ளையான் சம்மாந்துறை மக்களை பார்த்தும் கேட்கின்கிறார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |