புகையிரத ஆசன முன்பதிவு குறித்த விசேட அறிவித்தல்
இன்றைய தினம் முதல் புகையிரத ஆசன முன்பதிவு நடவடிக்கைகள் இணைய வழியில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை புகையிரத திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் இரவு 7.00 மணி முதல் புகையிரத ஆசன முன்பதிவுகள் ஓன்லைன் மூலம் மட்டும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இது வரை காலமும் 40 வீதமான ஆசனங்கள் மட்டும் ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது.
எனினும் இன்று முதல் முழுமையாகவே ஒன்லைன் மூலம் மட்டுமே ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழியில் முன்பதிவு செய்து கொண்டாலும் புகையிரத நிலையம் சென்று நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
எனினும் இன்றைய தினம் முதல் புகையிரத நிலையம் செல்லத் தேவையில்லை எனவும் முன்பதிவு குறித்த ஆவணத்தின் புகைப்படமொன்று வைத்திருப்பது போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச நுழைவுச்சீட்டுக்களையும் ஒன்லைன் முறையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.