ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இலங்கை பங்கேற்காதது தவறான விடயம்
சீனாவில் அண்மையில் முடிவடைந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் இலங்கை பங்கேற்காதது தவறான விடயம் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இது, இலங்கை அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட நாடு என்ற அதன் பிம்பத்தை சேதப்படுத்தும். மேலும் பொருளாதார நன்மைகளை இழக்க நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் இணைப்பு, வர்த்தக வசதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை முக்கிய விவாத அம்சங்களாக இருந்தன.
அரசாங்கத்தின் கொள்கை
இதுபோன்ற சூழ்நிலையில் சில நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை இலங்கை தவறவிட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கையின் கடந்த கால அரசாங்கங்கள் அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பராமரித்து வந்தன.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை சர்வதேச ரீதியாக கேள்விக்குள்ளாக்கப்படலாம், அத்துடன், இலங்கை மேற்கத்திய சார்பு நாடு என்று முத்திரை குத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்றும். கூறினார் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.