காத்தான்குடியில் திறன் அபிவிருத்தி பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
சவால்களை வெற்றி கொள்ளும் இளைய சமுதாயத்தினை உருவாக்கும் நோக்குடன் காத்தான்குடியில் திறன் அபிவிருத்தி கற்கை நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இன்று (04) காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நெறிப்படுத்தலின் கீழ் பிரதேச செயலாளரின் ஆலோசனையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பயிற்சி நெறியும் சான்றிதழ்களும்
48 மணித்தியாலங்களை கொண்ட இப்பயிற்சி நெறியில் 22 மாணவர்கள கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் இப்பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, குழந்தை நல வைத்தியர், பொது சுகாதார பரிசோதகர், உளவளத்துணை மாவட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் அனைவரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
அத்துடன் இந் நிகழ்ச்சியில் சுய திறன் மதீப்பீடு, அவசர நிலைமைகளின் போது செயற்படும் விதம், உள சுகாதாரம் மற்றும் குழந்தை விருத்தி, போதைப் பொருள் முற்தடுப்பு, இனப்பெருக்க சுகாதாரம், குடும்ப வாழ்க்கைக்கு ஆன்மீகம் போன்ற பல தலைப்புக்களில் தெளிவாக மற்றும் இலகுவான முறையில் சமூகத்திற்கு சென்றடையும் வகையில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தனுஜா நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ரஊப், மற்றும் குழந்தை நல வைத்தியர் .பி.கமலநாதன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |