சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

SJB R M Ranjith Madduma Bandara Sarath Fonseka
By Kamal Jun 24, 2024 03:01 AM GMT
Kamal

Kamal

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக இந்த வாரத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயற்குழு இந்த வாரத்தில் கூடி சரத் போன்சேக்காவிற்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கை

கட்சியின் பதவி நிலை எதுவாக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை | Sjb To Take Action Against Fonseka  

சரத் போன்சேக்கா ஒழுக்கமான முறையில் செயல்படுவதாக தென்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே சரத் பொன்சேகாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறு எனினும் டாக்டர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என தெரிவித்துள்ளார்.

டொக்டர் ராஜித, ஜனாதிபதி ரணிலை புகழ்ந்தாலும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை, சரத் பொன்சேகா போன்று விமர்சனம் செய்யவில்லை என ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டி உள்ளார்.