ஐக்கிய மக்கள் சக்தியில் சரத் பொன்சேகாவுக்கு பதிலாக புதியவர்

SJB Sajith Premadasa Sarath Fonseka
By Rukshy Jul 20, 2024 02:26 AM GMT

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பதிலாக அந்த கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை அதன் புதிய தலைவராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இது தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

செயற்குழு

மேலும் கூறுகையில்,“நாங்கள் தற்போது இந்த விடயத்தை பற்றி விவாதித்து வருகிறோம். 2020ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போது எம்முடன் இல்லாததால் புதிய தலைவரை நியமிக்க வேண்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் சரத் பொன்சேகாவுக்கு பதிலாக புதியவர் | Sjb New President Baqir Marker

இதேவேளை பக்கீர் மார்க்கரை தலைவராக நியமிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

அடுத்த வாரம் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் செயற்குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கட்சி மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.'' என்றும் கூறியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW