அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் அரிசி வகைகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சம்பா, கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்கே இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு அரிசி உற்பத்தியாளர்கள் போதுமான அளவில் நாட்டரிசியை சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டாத காரணத்தினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரிசி இறக்குமதி
நேற்றைய தினத்துக்குள் சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருந்த போதும் இதுவரை 26 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்றைய தினம் முடிவடைய இருந்த அரிசி இறக்குமதிக்கான கால எல்லையை அரசாங்கம் மீண்டும் நீடித்துள்ளது.
பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை
இதேவேளை, தற்போது அரிசி 22,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசியை தற்போது பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த செயற்பாடு சில கட்டுப்பாடுகளுடனே இடம்பெறுகின்றது " என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |