நாளை ட்ரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி

By Fathima Dec 27, 2025 08:34 AM GMT
Fathima

Fathima

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி நாளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி திட்டம்

சமாதானத்திற்காக அமெரிக்க ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட '20 அம்ச அமைதி திட்டம்' மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை ட்ரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி | Shelensky To Meet Trump Tomorrow

இந்த நிலையில் புத்தாண்டிற்கு முன்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தான் நம்புவதாக உக்ரைனின் ஜனாதிபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவியாளர், அமெரிக்க அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக மேலதிக பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.