நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

Parliament of Sri Lanka Sajith Premadasa Shanakiyan Rasamanickam
By Laksi Jan 10, 2025 04:05 AM GMT
Laksi

Laksi

திறந்த நாடாளுமன்ற முன்னெடுப்புக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் (Shanakiyan Rasamanickam )ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பத்தாவது நாடாளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் 08 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜனக சேனாரத்ன முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அதனை வழிமொழிந்தார்.

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நாடாளுமன்ற ஒன்றியம்

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார வழிமொழிந்தார்.

நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு | Shanakiyan As Vice President Parliamentary Union

அத்துடன், இந்த ஒன்றியத்தின் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதி இணைத் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, சந்தன சூரியஆரச்சி, எஸ். எம். மரிக்கார் மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள், நாடாளுமன்றத்தை பொதுமக்களுக்கு நெருக்கமடையச் செய்வதற்கு இந்த ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பல பகுதிகளில் இன்று முதல் பலத்த மழை

நாட்டில் பல பகுதிகளில் இன்று முதல் பலத்த மழை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW