36 ஆண்டு சேவைக்கு பின் ஓய்வு பெறும் பொலிஸ் அதிகாரி...!

Sri Lanka Police Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jul 16, 2025 04:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட சேவையை வழங்கிய எஸ்.எச்.முபாரக் (சுபைர் ஹமீத் முபாரக்) இம்மாதத்துடன் (ஜுலை) தனது அரச சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார்.

1989 செப்டம்பர் 12ஆம் திகதி பொலிஸ் துறையில் இணைந்த இவர், தனது பணிக்காலத்தில் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு ரணசிங்க பிரேமதாசவிற்கு மெய் பாதுகாவலர்களாக அமர்த்தப்பட்டு அதிலிருந்து சிறிது காலம் சென்ற பின்பு களுத்துறை கடுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பயிற்சியை தொடர்ந்துள்ளார்.

டிஜிட்டல் ID திட்டத்தில் தரவு மீறல் இல்லை : உறுதி செய்யும் இலங்கை அரசாங்கம்

டிஜிட்டல் ID திட்டத்தில் தரவு மீறல் இல்லை : உறுதி செய்யும் இலங்கை அரசாங்கம்

பதவி காலம்

அதனை தொடர்ந்து, இலங்கை பொலிஸ் கல்லூரியில் தனது பயிற்சியை முடித்து விட்டு கொழும்பு அதிமேதகு ஜனாதிபதியின் பாதுகாப்பு கடமையில், மே மாதம் 01ம் திகதி ஜனாதிபதி மரணிக்கும் வரைக்கும் அவருடைய பணிக்கு சேவையாற்றி விட்டு பிராந்தியங்களில் பொது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்.  

அத்தோடு, கடுகுருந்த விசேட அதிரடிப்படை முகாம், களுத்துறை பொலிஸ் கல்லூரி பயிற்சி வகுப்புகளை முடித்தார்.

36 ஆண்டு சேவைக்கு பின் ஓய்வு பெறும் பொலிஸ் அதிகாரி...! | Sh Mubarak Sri Lanka Police Retirement 2025

இவர் சேவையின் இறுதியில் கொழும்பு தெற்கு பகுதியில் கடமை செய்துவிட்டு தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டம் மகாஓயா , சென்றல் கேம்ப், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஏறத்தாழ 16 ஆண்டுகள் சேவையாற்றியதோடு பெரும் குற்றப்பிரிவு, நிர்வாகப்பிரிவு என கடமையாற்றி அண்மையில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சமுக நிர்வாகப்பிரிவு மற்றும் Record Room போன்ற கடமைகளை வழக்கு தொடர்பான பொறுப்புக்களில் செயற்பட்டு தனது சேவையை நிறைவு செய்துள்ளார்.

பரிந்துரைகளை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

பரிந்துரைகளை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

வெளிநாடுகளில் கடவுச்சீட்டு விண்ணப்பம் குறித்து வெளியான அறிவிப்பு

வெளிநாடுகளில் கடவுச்சீட்டு விண்ணப்பம் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW