5 மாகாணங்களில் தொடரும் கடுமையான வெப்பம்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Water Cut Water
By Rakshana MA Feb 19, 2025 09:02 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(19) வெப்பமான வானிலை நிலவும் என்றும், இதனால் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளளது.

உணவுப்பொருட்களின் விலையில் திடீர் மாற்றம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உணவுப்பொருட்களின் விலையில் திடீர் மாற்றம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எடுக்க வேண்டிய நடவடிக்கை 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்ததாவது,

இதன் காரணமாக, வேலையில் இருப்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

5 மாகாணங்களில் தொடரும் கடுமையான வெப்பம் | Severe Heat To Continue In 5 Provinces Today

அத்துடன், சிறு குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்கவும்.

இதேவேளை, எதிர்காலத்தில் நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ள மத்திய மலைப்பகுதியில் மழை தாமதமாகப் பெய்யக் கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த நிலைமையே வெப்பநிலை அதிகரிப்பிற்கு வழிவகுத்ததாக அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீ்ர் விநியோகத்தில் ஏற்படவுள்ள சிக்கல்

இலங்கையில் நீ்ர் விநியோகத்தில் ஏற்படவுள்ள சிக்கல்

வறட்சியான வானிலை

எதிர்காலத்தில், மின்சாரம், நீர்ப்பாசனம் மற்றும் பேரிடர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

5 மாகாணங்களில் தொடரும் கடுமையான வெப்பம் | Severe Heat To Continue In 5 Provinces Today

மேலும், நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் சபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றது.

வறட்சியான வானிலை காரணமாக நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்துள்ளதாக வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இதன் விளைவாக, நீர் பயன்பாட்டைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வாரியம் பொதுமக்களிடம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அரச ஊழியர் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான தகவல்

குழந்தைகள் மன ஆரோக்கியமும் எதிர்காலமும்! பெற்றோர்களுக்கான ஆலோசனைகள்

குழந்தைகள் மன ஆரோக்கியமும் எதிர்காலமும்! பெற்றோர்களுக்கான ஆலோசனைகள்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW