பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தனியான சேவைப் பிரமாணக்குறிப்பு அறிமுகம்

Ampara Government Employee Sri Lankan Peoples
By Rakshana MA Jan 08, 2025 10:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் சுமார் 15,000 இற்கும் மேற்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிப்பதற்கு பொது நிர்வாக அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பொது நிர்வாக அமைச்சில் நேற்று (07)  அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், பொது நிர்வாக உள்நாட்டு அலுவலக அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக்க பண்டாரவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்திப்பினை தொடர்ந்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிப்பது விடயமாக உடனடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை : 9 வியாபார தளங்கள் முற்றுகை

சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை : 9 வியாபார தளங்கள் முற்றுகை

பிரமாணக்குறிப்பு...

அத்துடன், இது தொடர்பில் கடந்த வாரம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்னவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு நேரடியாக சந்தித்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிரமாணக் குறிப்பு உருவாக்குவது பற்றி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தனியான சேவைப் பிரமாணக்குறிப்பு அறிமுகம் | Service Manual For Economic Development Officers

இந்த நிலையில், பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருடனான சந்திப்பையடுத்து, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிரமாணக் குறிப்பு சம்மந்தமான நோக்கங்கள், அதன் முக்கியத்துவங்கள் பற்றி தொழிற்சங்க பிரதிநிதிகளினால் ஊடக சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது.

மேலும், இது விடயமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஒருங்கிணைத்து அவர்களை தெளிவுபடுத்த எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க தலைவர் கபீர் கலீல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் சுவாச நோய்களின் ஆபத்து

அதிகரித்து வரும் சுவாச நோய்களின் ஆபத்து

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று முதல்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று முதல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery