அதிகரித்து வரும் சுவாச நோய்களின் ஆபத்து
Sri Lankan Peoples
Respiratory diseases
Doctors
By Rakshana MA
இலங்கையில் அண்மைக்காலமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இவர்களில் ஆஸ்துமா, சிஓபிடி மற்றும் காசநோயாளிகள் அதிகரிப்பு காணப்படுவதாக நுரையீரல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க(Neranjan Dissanayake) குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தினை, கொழும்பில் நேற்று(07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
சுவாச நோய்
மேலும், இந்த நோய் பரவி வருவதால் குழந்தைகளின் உடல்நிலை குறித்து தனிக்கவனம் செலுத்துமாறு சுகாதாரத்துறையினர், பெற்றோர்களுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |