மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்த செந்தில் தொண்டமான்

Ceylon Workers Congress Senthil Thondaman Malaysia
By Aadhithya Jul 09, 2024 02:46 PM GMT
Aadhithya

Aadhithya

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது, இன்று (09) கோலாலம்பூரில் இடம்பெற்றுள்ளது.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சரவணன் முருகனின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகப்பூர்வ பயணமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் மலேசியாவுக்குச் சென்றிருந்தார்.

இருதரப்பு உறவுகள்

இந்தநிலையில், பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான சந்திப்பில் மலேசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான கலந்துரையாடலை ஆளுநர் செந்தில் தொண்டமான் நடத்தியுள்ளார்.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்த செந்தில் தொண்டமான் | Senthil Thondaman Meets Malaysia Prime Minister

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதற்கான சாதகமான காரணிகள் குறித்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசிய பிரதமருடன் கலந்துரையாடியதுடன், இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பையும் பிரதமர் இப்ராஹிம்க்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்ததுள்ளார்.

இலங்கையில் வாழும் பெருந்தோட்ட சமூகத்தின் 200 வருட நினைவு முத்திரையையும் மலேசியப் பிரதமருக்கு வழங்கியிருந்த இதேவேளை, மலேசிய நிதியமைச்சர் அமீர் ஹம்சா, பிரதமர் துறை அமைச்சர் நைம் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW