கிழக்கில் சுயதொழில் அபிவிருத்தி நிலையம் திறப்பு!

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Development Eastern Province
By Rakshana MA Nov 23, 2024 11:38 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில்  அபிவிருத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திறப்பு விழாவானது நேற்று(22) காவியா சுயதொழில் அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அஜித் யோகமலரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் மற்றும் கெல்விட்டாஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கமலேஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.

36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காக கொண்டு பயணிக்கும் புதிய அரசாங்கம்!

36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காக கொண்டு பயணிக்கும் புதிய அரசாங்கம்!

சுயதொழில் முன்னேற்றம்

மேலும் இந்நிலையமானது கெல்விட்டாஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் காவியா சுயதொழில் அபிவிருத்தி சங்கம் மற்றும் மட்டக்களப்பு கூட்டுறவு இளைஞர் அபிவிருத்தி சங்கம் இரண்டும் இணைந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தி சிறந்த சந்தை வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் சுயதொழில் அபிவிருத்தி நிலையம் திறப்பு! | Self Employment Center Opens In East Batticaloa

இதில் 52 சுயதொழில் உற்பத்தி குழுக்களை அமைத்து தொழில் முயற்ச்சி உதவிகளை காவியா பெண்கள் அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ந்தும், சுய தொழில் உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பு குறைவாக காணப்படுகின்றமையால் இதனை தீர்த்து வைப்பதற்கான நிலையமாகவும் இது செயற்படவுள்ளது.

இந் நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் நிஷாந்தினிஅருள்மொழி, கெவிடாஸ் நிறுவன திட்ட முகாமையாளர் ரஞ்சித் விஜகோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சிஐடி முன்னிலையில் பிள்ளையானின் 7 மணிநேர வாக்குமூலம் : வெளியான தகவல்

சிஐடி முன்னிலையில் பிள்ளையானின் 7 மணிநேர வாக்குமூலம் : வெளியான தகவல்

மீண்டும் சி.ஐ.டியில் முன்னிலையான பிள்ளையான்

மீண்டும் சி.ஐ.டியில் முன்னிலையான பிள்ளையான்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGallery