சீதுவ துப்பாக்கிச் சூடு: படுகாயமடைந்தவர் பலி

Sri Lanka Police Gun Shooting
By Shadhu Shanker Apr 08, 2025 08:41 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

சீதுவையில் இன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

தையல் இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடையில் இருந்தபோது, ​​பாதிக்கப்பட்டவர் சுடப்பட்டதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு காயங்களுக்குள்ளான பாதிக்கப்பட்டவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சீதுவ துப்பாக்கிச் சூடு: படுகாயமடைந்தவர் பலி | Seeduwa Gun Shoot Today

சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிசூட்டுக்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த காரணமும் வெளிவரவில்லை.

சம்பவம் குறித்து சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.