மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு!

By Fathima Jan 07, 2026 05:27 AM GMT
Fathima

Fathima

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கடலுக்குச் செல்ல வேண்டாம்

அனர்த்த நிலைமை காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு! | Sea Turbulence Again In Batticaloa District

தமது அன்றாட ஜீவனோபாயத்தை பெற்றுக்கொள்ள எவ்வித வழிகளும் இல்லாத நிலையில் அல்லல்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பூனொச்சிமுனை உட்பட மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மீனவர்கள் கடும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கரையோர பிரதேசங்களில் அமைந்துள்ள மீனவர்களுக்கு சொந்தமான மீன் வாடிகளும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் கடல் மீன்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


GalleryGalleryGalleryGallery