மன்னார் பாடசாலையில் மாணவனை காலால் உதைத்த போதகர்

Ministry of Education Sri Lankan Tamils Mannar Sri Lankan Schools Education
By Fathima Apr 25, 2023 04:21 PM GMT
Fathima

Fathima

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பாடசாலை ஒன்றின் பதில் அதிபரான போதகர் ஒருவர் மாணவனை காலால் உதைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வடக்கு கல்வி அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கை

குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் கவனம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பதில் அதிபரான போதகர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.