கல்முனையில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ள பாடசாலை வீதி(Photos)

Ampara Eastern Province Kalmunai
By Farook Sihan May 04, 2023 12:10 PM GMT
Farook Sihan

Farook Sihan

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பாடசாலைக்கு செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர்.

கல்முனையில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ள பாடசாலை வீதி(Photos) | School Road Converted Into A One Way In Kalmunai

குறைவடையும் போக்குவரத்து நெரிசல்

இதனையடுத்து (03.04.2023)ஆம் திகதி ஸாஹிரா கல்லூரி வீதியினை ஒரு வழிப்பாதை மாற்றுவதற்கான பெயர்ப் பலகையினை கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களம் நிர்மாணித்துள்ளது.

இதன் பிரகாரம் குறித்த பெயர்ப்பலகையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரங்களான காலை 7.00 மணி முதல் காலை 8.00 மணி வரை மற்றும் பாடசாலை விடும் நேரமான மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை வெள்ளிக்கிழமை பாடசாலை விடும் நேரமான காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை உள்ள நேரங்களில் பிரதான வீதியிலிருந்து ஸாஹிரா கல்லூரி வீதிக்கு எந்தவித வாகனங்களும் உட்செல்ல முடியாதவாறு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது.

கல்முனையில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ள பாடசாலை வீதி(Photos) | School Road Converted Into A One Way In Kalmunai

இதன்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பாடசாலை சமூகத்தினர் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது   

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery