பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Fathima Jun 10, 2023 12:32 AM GMT
Fathima

Fathima

பாடசாலையின் 2023 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை(12.06.2023) ஆரம்பமாகவுள்ளது.

2022ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி முதல் நேற்று முன்தினம்(08.06.2023) வரை இடம்பெற்றது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கு கடந்த மாதம் 26.05.2023 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு | School Holiday Ministry Of Education

முதலாம் தவணை பாடசாலை ஆரம்பம்

இந்நிலையில், பாடசாலையின் கற்பித்தல் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.