புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு

Ministry of Education Grade 05 Scholarship examination Education
By Laksi Sep 24, 2024 08:07 AM GMT
Laksi

Laksi

நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா? என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  விசாரணைகளின் பின்னர் நியாயமான தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர: சுனில் ஹந்துன்நெத்தி

இலங்கையின் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர: சுனில் ஹந்துன்நெத்தி

வினாத்தாள் கசிவு விவகாரம்

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு | Scholarship Exam Paper Leak Issue

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனாதிபதி

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனாதிபதி

சாய்ந்தமருதை சீண்டிய ஹக்கீம் மீது சட்டநடவடிக்கை

சாய்ந்தமருதை சீண்டிய ஹக்கீம் மீது சட்டநடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW