தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று முதல்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி இன்று(08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 40 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jeyasunthara) தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை
இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இடம்பெற்ற மூன்று வினாக்கள் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், அதற்கான இலவச புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் அண்மையில் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 மாணவர்களும், சிங்கள மொழிமூலத்தில் 244,092 மாணவர்களும், தமிழ் மொழிமூலத்தில் 79,787 மாணவர்களும் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |