களுவாஞ்சிக்குடி சமூக அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Feb 10, 2025 12:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

களுவாஞ்சிக்குடி சமூக அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இரத்த தான நிகழ்வானது நேற்று (09) களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியர் க.புவனேந்திரநாதன் முகாமைத்துவத்தின் கீழ் இரத்த வங்கியில் நடைபெற்றது.

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை! வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை! வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

25 ஆண்டுகள் பூர்த்தி

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சமூக அபிவிருத்தி நிலையம் உருவாக்கப்பட்டு, 25 ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு இந்த இரத்ததான முகாம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி சமூக அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு | Save Lives Blood Drive By Kaluwanchikudi

அத்துடன்,  களுவாஞ்சிக்குடி சமூக அபிவிருத்தி நிலையத்தின் ஸ்தாபக தலைவர் ஆறுமுக வடிவேல் கோகுலரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

மேலும், களுவாஞ்சிக்குடி சமூக அபிவிருத்தி நிலையமானது இப்பிரதேசத்தில் பல்வேறு புத்திஜீவிகளையும், கல்விமான்களையும் உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதான சந்தேக நபர்! முன்னெடுக்கப்பட்ட விசாரணை

அம்பாறையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதான சந்தேக நபர்! முன்னெடுக்கப்பட்ட விசாரணை

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி! ஏற்பட்டுள்ள சிக்கல்

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி! ஏற்பட்டுள்ள சிக்கல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery