அம்பாறையில் 32 ஆயிரம் வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது
அம்பாறை (Ampara) மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதிப் பகுதியில் சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (7) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் திறந்து வைக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு இவ்வாறு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இவ்வாறு மீட்கப்பட்ட மாதிரி வாக்கு சீட்டில் ஒரு தேசிய கட்சி ஒன்றின் சின்னத்திற்கும் இலக்கம் இரண்டிற்கும் புள்ளடி இடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ,மீட்கப்பட்ட சட்டவிரோதமான வாக்குச்சீட்டுக்கள் யாவும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |