முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க விளக்கமறியலில்...
Saman Ekanayake
By Fathima
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், பெப்ரவரி 11 வரை சமன் ஏகநாயக்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக சமன் ஏகநாயக்கே பெயரிடப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான இந்த வழக்கு பொதுச் சொத்து சட்டத்தின் விதிகளின் கீழ் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.