நாடாளுமன்றத்தில் கல்வித் தகைமைகளை சமர்ப்பித்த சஜித்

Parliament of Sri Lanka SJB Sajith Premadasa
By Laksi Dec 18, 2024 08:11 AM GMT

தனது சகல கல்வித் தகைமைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை சமர்ப்பித்துள்ளார்.

முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1 முதல் தரம் 5 வரையான கல்வியை புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும் கற்றதாக சஜித் குறிப்பிட்டுள்ளார்.

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: ஜனாதிபதி அறிவிப்பு

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: ஜனாதிபதி அறிவிப்பு

கல்வித் தகைமை

அத்தோடு, புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும், தரம் 6 முதல் தரம் 9 வரை ரோயல் கல்லூரியிலும் கற்றதாக தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கல்வித் தகைமைகளை சமர்ப்பித்த சஜித் | Sajith Submit Educational Qualifications

இதேவேளை, இலங்கையில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்றும் இங்கிலாந்தில் உள்ள மில்ஹில் கல்லூரியில் கல்வி கற்றதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

அந்த வகையில், 1983-1984 ஆண்டு காலப் பகுதியில் இங்கிலாந்தில் பொது நிலை தேர்வில் கலந்து கொண்டு 2 ஏ சித்தியும், 2 பி சித்தியும் மற்றும்3 சி சித்தியும் பெற்று தேர்ச்சி பெற்றதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம்

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW