இலங்கையில் தங்கியிருந்த ரஷ்ய தம்பதி கைது

Sri Lanka Police Kandy Sri Lanka Russia
By Rakshana MA Oct 27, 2024 03:34 PM GMT

இலங்கையில்(sri lanka) தங்கியிருந்த ரஷ்ய (russia)தம்பதி கண்டி சுற்றுலா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஹந்தானை பகுதியில் வைத்து நேற்று (26) மாலை இந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு சட்டங்களை மீறி விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

39 வயதான ஆண் மற்றும் 32 வயதான ரஷ்ய பெண் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இலங்கையில் தங்கியிருந்த ரஷ்ய தம்பதி கைது | Russian Couple Arrested In Kandy

இவர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி(kandy) காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: போட்டுடைத்த றிசாட்

தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: போட்டுடைத்த றிசாட்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW