உக்ரைனில் ரஷ்ய விமானப்படையின் உக்கிர தாக்குதல்!

Russo-Ukrainian War Ukraine World Russia
By Rakshana MA Jun 25, 2025 08:30 AM GMT

தென்கிழக்கு உக்ரைனில் ரஷ்ய விமானப்படை மேற்கொண்ட கொடூரமான தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விமானத் தாக்குதல், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் தொடருந்து நிலையம் ஆகியவற்றை நோக்கி நடத்தப்பட்டதாகவும், பல்வேறு குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

உக்கிர தாக்குதல் 

மேலும், வடகிழக்கு உக்ரைனின் சுமி நகரில் மேற்கொள்ளப்பட்ட வேறு தாக்குதல்களில், ஒரு குழந்தை உட்பட மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனில் ரஷ்ய விமானப்படையின் உக்கிர தாக்குதல்! | Russian Airstrike Kills 17 In Ukraine

இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறும்போது, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நெதர்லாந்தில் நடைபெற்று வரும் நேட்டோ (NATO) உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்தார்.

இந்த உச்சி மாநாட்டின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான கூடுதல் தடைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதுடன், ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே முக்கிய சந்திப்பும் இடம்பெற உள்ளது.

உக்ரைனில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலை மேலும் தீவிரமாகும் சாத்தியம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மட்டக்களப்பு கொடூர கொலை வழக்கில் இரட்டை சகோதரிகள் கைது!

மட்டக்களப்பு கொடூர கொலை வழக்கில் இரட்டை சகோதரிகள் கைது!

சொர்க்கத்தை அருளும் நாற்பது ஹதீஸ்கள்

சொர்க்கத்தை அருளும் நாற்பது ஹதீஸ்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW