ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் திணறும் உக்ரைன்
உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள பிராட்ஸ்கே என்ற குடியிருப்பு பகுதியை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் இராணுவத்தின் முக்கிய நிலைகள், எரிசக்தி நிலையங்கள் மற்றும் ட்ரோன் சேமிப்பு இடங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நேரடி தாக்குதல்கள்
உக்ரைன் தரப்பில், குறிப்பாக போக்ரோவ்ஸ்க் திசையில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதன் தலைமைத் தளபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

தினசரி சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நேரடி தாக்குதல்கள் ஏற்படும் இவ்வேளையில், இப்பகுதி தற்போது மிகவும் சவாலான போர்க்களமாக மாறியுள்ளது.
கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும், போக்ரோவ்ஸ்க்கின் வடக்கு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக உக்ரைன் இராணுவம் உறுதியளித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தற்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.