யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளை

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lankan Peoples Crime
By Rakshana MA Nov 28, 2024 02:09 PM GMT
Rakshana MA

Rakshana MA

யாழ்ப்பாணத்தில்(Jaffna) ஆலய பூசகர் ஒருவரை கட்டி வைத்து கொள்ளை சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவமானது நேற்று(27) யாழ்.கைதடியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே நேற்று முற்பகலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

மிரட்டப்பட்ட பூசகர்

இங்கு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கூரிய ஆயுதங்களினால் மிரட்டியதனால் பூசகர் அலறியுள்ளார்.

தொடர்ந்தும் பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்த போது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலியையும், 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளை | Robbed In Jaffna Temple

மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு உதவிய பெண் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் கைதான பெண்ணை இன்று (28) சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் தப்பிச் சென்ற இரு கொள்ளையர்களையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வெளியான அறிவித்தல்

அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வெளியான அறிவித்தல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery