சல்மான் எம்.பியின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்

Sri Lanka Politician Sri Lanka Death
By Fathima May 02, 2023 10:25 AM GMT
Fathima

Fathima

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எச்.எம்.சல்மானின் மறைவால் முஸ்லிம் சமூகம் நல்லதொரு புத்திஜீவியை இழந்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (02.05.2023) அனுப்பியுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புணர்வாழ்வு அதிகார சபையின் தலைவராக இருந்த மர்ஹும் சல்மான், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தில் கணிசமான பங்களிப்பை நல்கிய பெருந்தகை.

சல்மான் எம்.பியின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம் | Rishad Sympathy

மரணம் உங்களை வந்தடைந்தே தீரும்

குறிப்பாக, வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேறலில் ஒரு சமூகத்துக்குள்ள தனித்துவ அடையாளத்தைப் புரிந்து செயலாற்றியவரும் இவர்தான். சட்டப் புலமையில் அவரிடமிருந்த நுணுக்கம் பெருந்தலைவர் அஷ்ரஃபுக்கும் பல தடவைகள் உதவியிருந்தன.

பாராளுமன்ற உறுப்பினராயிருந்த அவர், வாக்குறுதியைக் காப்பாற்ற எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் இன்னும் பிரகாசிக்கின்றன.

நிச்சயமாக, நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை வந்தடைந்தே தீரும்" என்கிறது இறைமறை. எனவே, இறைவனின் நாட்டத்தில் நம்பிக்கை வைத்து அன்னாருக்காகப் பிரார்த்திப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய குடும்பத்தினருக்குப் பொறுமையையும் மனதைரியத்தையும் வழங்குவானாக..! ஆமீன்..!” எனக் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now