றிஷாட் பதியுதீன் முயற்சியால், 8 கோடி ரூபாய் நிதியில் மூன்று மாடி பாடசாலை கட்டிடம்

Puttalam Sri Lanka Rishad Bathiudeen
By Faarika Faizal Oct 14, 2025 04:15 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் முயற்சியால், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்தில் எட்டு கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட மூன்று மாடி பாடசாலைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையான புதிய பாடசாலை கட்டிடம் பாடசாலையின் அதிபர் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்

புதிய பாடசாலை கட்டிடம்

அத்துடன், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமருமளவு மண்டபம் உள்ளிட்ட வகுப்பறைகள் அடங்கியதாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

றிஷாட் பதியுதீன் முயற்சியால், 8 கோடி ரூபாய் நிதியில் மூன்று மாடி பாடசாலை கட்டிடம் | Rishad Bathiudeen

அத்தோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பைஷல், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான தாஹீர், புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டவர்களுடன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

சவூதி அரேபியாவில் அனைத்து வகை விசா வைத்திருப்போருக்கும் உம்ரா அனுமதி

சவூதி அரேபியாவில் அனைத்து வகை விசா வைத்திருப்போருக்கும் உம்ரா அனுமதி

 

பட்டினியில் வாடும் காசா மக்கள்:பயணிக்கவிருக்கும் மனிதாபிமான உதவி பாரவூர்திகள்

பட்டினியில் வாடும் காசா மக்கள்:பயணிக்கவிருக்கும் மனிதாபிமான உதவி பாரவூர்திகள்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW      
GalleryGalleryGalleryGalleryGallery