நெல்லுக்கான புதிய விலை! வெளியான தகவல்

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Money Rice
By Rakshana MA Feb 06, 2025 07:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக இன்று (06) முதல் களஞ்சியசாலைகளை திறக்கவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நெல்லுக்கான உத்தரவாத விலையை விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த நேற்றையதினம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாட்டு நெல் கிலோ ரூபா 120இற்கும், சம்பா நெல் கிலோ ரூபா 125இற்கும், கீரி சம்பா கிலோ ரூபா 132இற்கும் கொள்முதல் செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவித்தல்

விவசாயிகள் கவலை

தற்போதைய பருவத்துக்கான அறுவடை தொடங்கி சில வாரங்களே கடந்துள்ள நிலையில், தனியார் வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கான புதிய விலை! வெளியான தகவல் | Rice Prices And Paddy Market Updates In Sri Lanka

இந்த நிலையில், நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், உத்தரவாத விலைகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் அவை போதியதாக இல்லை என விவசாயிகள் கவலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை

சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW