பாடசாலை பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஆராய்வு!

Colombo Sri Lanka
By Nafeel May 01, 2023 03:19 PM GMT
Nafeel

Nafeel

பாடசாலை போக்குவரத்து சேவையின் கட்டணத்தை குறைப்பதற்கு அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நேற்று(30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறைக்கப்படும் கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியால், பெற்றோர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே, விலைகுறைப்பின் நன்மையினை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.