மாவடிப்பள்ளி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி வைப்பு

Ampara Government Of Sri Lanka Climate Change Eastern Province
By Laksi Dec 12, 2024 12:36 PM GMT
Laksi

Laksi

அண்மையில் காரைதீவு- மாவடிப்பள்ளி பாலத்திற்கருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஆறு மத்ரஸா மாணவர்கள் மற்றும் பொதுமகன் ஒருவருமாக எழு குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நஷ்ட ஈடு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்காக ரூபாய் 250000 நஷ்ட ஈடாக வழங்கி வைக்கும் நிகழ்வும், அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யும் நிகழ்வும், சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினரும்,பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஏ.ஆதம்பாவா கலந்து கொண்டு கசோலைகளை வழங்கி வைத்தார்.

அம்பாறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்

அம்பாறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்

துஆப் பிரார்த்தனை

அத்துடன் இந்த நஷ்ட ஈடுத் தொகையினை ஒரு மில்லியனாக அதிகரித்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் இந்த நிகழ்வின் போது தெரிவித்திருந்தார். 

மாவடிப்பள்ளி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி வைப்பு | Relief To The Families Of Madrasa Students

மேலும் இந்த நிகழ்வில் கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப்,சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB),கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவரும்,முன்னாள் அரசாஙக அதிபருமான ஐ.எம் ஹனீபா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுஸைன்  எம்.இம்தியாஸ், சம்மாந்துறை உலமா சபைத் தலைவர் மெளலவி எம்.எல்.மரணித்தவர்களுசம்மாந்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம் நெளபர்,அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாருத்தீன் உட்பட கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ,மெளலவி அல்ஹாபிழ் ஏ.பெளஸ்தீனால் (தப்லீகி) மரணித்தவர்களுக்காக துஆப் பிரார்த்தனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery