விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பெரும் தொகை நிவாரணம்!
Ministry of Agriculture
Floods In Sri Lanka
Landslide
Cyclone Ditwah
By Fathima
'டித்வா' சூறாவளியால் அழிவடைந்த சோளம், காய்கறி மற்றும் பிற பயிர் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு அரசாங்கம் ரூ. 381 மில்லியனுக்கும் அதிகமான சிறப்பு நிவாரணத்தை வழங்கியுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிவாரணம்
இந்த தொகை இதுவரை 11,081 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 365 சோள விவசாயிகளுக்கு ரூ. 14,423,125 மற்றும் சிறப்பு நிவாரணமாக 9668 காய்கறி விவசாயிகளுக்கு ரூ. 330,750,816 வழங்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சோளம், காய்கறி மற்றும் பிற பயிர் சாகுபடிகளுக்கு அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த சிறப்பு நிவாரணம் வழங்க விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.