திருகோணமலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் வெளியான தகவல்

Trincomalee Eastern Province General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 12, 2024 08:29 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று கட்சிகள் மற்றும் 03 சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(11) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்காக 20 அரசியல் கட்சிகளும் மற்றும் 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன.

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

அதில் 17 அரசியற் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் வெளியான தகவல் | Rejection Of Nomination Papers 3 Parties In Trinco

தேசிய ஜனநாயக முண்ணனி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு உட்பட மூன்று சுயேட்சை குழுக்களுமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டது.

சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை , சரியான முறையில் விண்ணப்பம் கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் மாதாந்தக் கொடுப்பனவு

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் மாதாந்தக் கொடுப்பனவு

ஓய்வூதியதாரர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு தொடர்பில் அநுர பணிப்புரை

ஓய்வூதியதாரர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு தொடர்பில் அநுர பணிப்புரை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW