முஸ்லிம் பிரதிநிதிகள் அற்ற புதிய அமைச்சரவை குறித்து வெளியான தகவல்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Cabinet National People's Power - NPP
By Laksi Nov 20, 2024 11:00 AM GMT
Laksi

Laksi

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில்  முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லாமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம் அளித்துள்ளார்.

இதன்போது, எமது அரசாங்கம் இலங்கையர்களை உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மத ரீதியான அடையாளங்களை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 76 ஆண்டுகளில் அனைத்து சமூகங்களும் தங்களது மத, கலாசார வேறுபாடுகளை மறந்து ஒரே நாடாக வாக்களித்து பெரும்பான்மை ஆட்சியைத் தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறை.

புதிய அரசாங்கத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: இம்ரான் மகரூப் பகிரங்கம்

புதிய அரசாங்கத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: இம்ரான் மகரூப் பகிரங்கம்

அரசாங்கத்தின் கொள்கை

தேசிய மக்கள் அரசாங்கம் எந்தவொரு சமூகத்தையும் அவர்களின் மத அல்லது கலாச்சார நடைமுறைகளின் அடிப்படையில் ஒருபோதும் பாகுபாடு காட்டாது. அரசாங்கத்தின் கொள்கையில் அது இல்லை.

முஸ்லிம் பிரதிநிதிகள் அற்ற புதிய அமைச்சரவை குறித்து வெளியான தகவல் | Rejection Of Muslim Minister In Cabinet

அனைத்து இன மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே எமது கட்சியில் உள்ளனர்.

இங்கு பாரபட்சம் காட்டுவதற்கு எதுவும் இல்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே அமைச்சு பதவிகள் வழங்கப்படுவதாக அமைச்சர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பாரிய நிதி மோசடியின் பின்னணி: அரச அதிகாரிகள்!

பாரிய நிதி மோசடியின் பின்னணி: அரச அதிகாரிகள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW