கொத்து - ப்ரைட் ரைஸ் விலைகள் குறைப்பு - வெளியான காரணம்

By Thulsi Mar 06, 2024 05:00 AM GMT

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாகவே விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

உணவு பொருட்களின் விலை

இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன.

கொத்து - ப்ரைட் ரைஸ் விலைகள் குறைப்பு - வெளியான காரணம் | Reduce Food Prices In Sri Lanka

அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.