புத்தளத்தில் பெருந்தொகையான கிருமி நாசினி மருந்துகள் மீட்பு

Puttalam Sri Lanka Navy Crime
By Laksi Sep 19, 2024 03:42 PM GMT
Laksi

Laksi

புத்தளம் - உச்சமுனை தீவுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கிருமி நாசினி மருந்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, டிங்கி இயந்திர படகில் 11 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் பெரும் எண்ணிக்கையிலான கிருமி நாசினி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் தயார்

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் தயார்

சட்ட நடவடிக்கை

குறித்த கிருமி நாசினி மருந்துகள் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

புத்தளத்தில் பெருந்தொகையான கிருமி நாசினி மருந்துகள் மீட்பு | Recovery Of Disinfectants In Kalpitiy

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட கிருமி நாசினிகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW