சாய்ந்தமருது பிரதான வீதிகளில் மின் விளக்கு தொகுதிகள் புனரமைப்பு
சாய்ந்தமருது பிரதான வீதியில் கடந்த பல வருட காலமாக ஒளிராமல் செயலிழந்து காணப்பட்ட பெரிய மின் விளக்கு தொகுதிகள் கல்முனை மாநகர சபையினால் தற்போது துரிதமாக திருத்தம் செய்யப்பட்டு ஒளியூட்டப்பட்டுள்ளன.
குறித்த மின்விளக்கு தொகுதிகள் செயலிழந்திருந்தமையினால் சாய்ந்தமருது நகர கடைத்தொகுதியின் ஒரு பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது.
விளக்கு தொகுதிகள் புனரமைப்பு
இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி இனால் உறுதியளிக்கப்பட்டதற்கு அமைவாக இவ்வேலைத்திட்டம் நேற்று(02) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் சாய்ந்தமருது நுழைவாயில் (Gateway) சந்தி தொடக்கம் அல்-ஹிலால் பாடசாலை சந்தி வரையான பிரதான வீதியில் செயலிழந்திருந்த மீயுயர் மின் கம்பங்கள் மற்றும் இணைப்புகள் திருத்தம் செய்யப்பட்டு, பிரகாசமான மின் விளக்குகள் புதிதாக பொருத்தப்படப்பட்டு, ஒளியூட்டப்பட்டுள்ளன.
இதில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


