எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்! உதயங்க வீரதுங்க
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என்பதை மிகவும் உறுதியாக கூற முடியும் என ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரும், ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியின் வேட்பாளர்
ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், மொட்டு கட்சியின் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகின்றார் என்பதனை மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மொட்டு கட்சியின் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகின்றார் என்பதனை மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும் என உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
எனினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என்பதை மிகவும் உறுதியாக கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கு உதவி பிரதமர் பதவியை ரணில் பெற்றுக்கொள்ளக் கூடும் எனவும், இவ்வாறான அரசியல் தந்திரங்கள் ரணிலுக்கு புதிதல்ல எனவும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.