ரணில் தலைமையில் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது பொதுக்கூட்டம் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டமானது ரணிலின் வெற்றியை உறுதி செய்ய இன்று (17) பிற்பகல் அநுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் அநுராதபுர வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜயஶ்ரீ மகாபோதியில் வழிபாடு நடத்தி ஆசி பெற்றதுடன், மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
பொதுக் கூட்டம்
இதேவேளை, நாடளாவிய ரீதியில் நூறு பொதுக்கூட்டங்களை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலரும் இதில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |