தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்

Election Commission of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis Election
By Fathima Jun 13, 2023 05:25 AM GMT
Fathima

Fathima

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இடம்பெறாது என கொழும்பு அரசியல் வட்டார தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதத்தின் பின்பே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தினத்துக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில்லை என்று ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என அறிய முடிகின்றது.  

தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் | Ranil Plan Presidential Election  

இதேவேளை தேர்தலை இலக்கு வைத்து இப்போதே அடிப்படை வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல்

முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் அரசாங்கம் நடத்த வேண்டும். ஆனால், அரசு தேர்தலை நடத்துவதற்குப் பணமில்லை என்று கூறி உள்ளூராட்சி சபைத் தேர்தலை காலவரையறை இன்றி ஒத்திப்போட்டுள்ளது.

தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் | Ranil Plan Presidential Election

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு இல்லை. எப்படியும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இடம்பெறாது என்பது தெளிவாகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.